கொரோனா தாக்கம் அரசியல் தலைவர்கள் மெத்தனத்தால் அதிகரிக்கிறதா?| How do world leaders' responses to coronavirus crisis? | Dinamalar

கொரோனா தாக்கம் அரசியல் தலைவர்கள் மெத்தனத்தால் அதிகரிக்கிறதா?

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (5)
Share
கொரோனா தாக்கம் அரசியல் தலைவர்கள் மெத்தனத்தால் அதிகரிக்கிறதா?, world leaders, coronavirus, corona, covid-19, coronavirus crisis, leaders, politics, US, US president, donald trump, south korea, bolzanaro, Moon Jae-in's government,

வாஷிங்டன்: உலகம் முழுக்க கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தென்கொரியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி விட்டது இது கடந்த மே முதல் தொடங்கியதாக தென்கொரிய அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்தியாவில் கடந்த 8 நாட்களில் ஒரு லட்சம் புதிய கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் ஒரு நாளில் சராசரியாக ஆயிரம் பேர் கொரோனாவால் மரணமடைந்து வருகின்றனர்.


latest tamil news


அமெரிக்காவில் கலிஃபோர்னியா, நியூயார்க், கெண்டகி உள்ளிட்ட பல மாகாணங்களில் மரணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு அமெரிக்காவில் இளம் குடிமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. உலக தலைவர்கள் பலர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


latest tamil news


அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் வரவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற பிரச்சாரப் பணிகளை துவங்கிவிட்டார். சமீபத்தில் அவர் ஓக்லஹோமா மாகாணத்தில் நடத்திய பிரச்சார பேரணி அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக விதிகளை பின்பற்றாமல் சமூக வலை பின்பற்றாமல் இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது. இதனால் அந்த மாகாணத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததாக பல தலைப்புகளில் தரப்புகளில் இருந்து புகார்கள் வந்தன. இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள் பாதிப்புக்கு பலியாகியுள்ள நிலையில் கொரோனா மென்மேலும் பரவுவது அரசியல் தலைவர்களது மெத்தனத்தால்தான் என குற்றஞ்சாட்டப்படுகிறது.


latest tamil news


இதேபோல தென் கொரியாவின் மூன் ஜே இன் அரசு, பிரேசிலில் போல்சனாரோ அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மோடி, ஷின்சோ அபே, ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் கொரோனாவை திறம்பட சமாளித்து வந்தாலும் பல இடங்களில் அரசியல் தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக ஊரடங்கை பின்பற்றாமல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. மறுபுறம் கடுமையான ஊரடங்கை பின்பற்றுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் மக்களால் முன்வைக்கப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X