காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் இளைஞர் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் இளைஞர் கொலை

Added : ஜூன் 23, 2020
Share



பெரம்பலுார்: காதல் திருமணம் செய்தது தொடர்பாக, ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகள் திவ்யா,22, அதே ஊரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்வகுமார்,25, இருவரும் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டு, அதே ஊரில் குடும்பம் நடத்தி வந்தார்.இந்நிலையில், திவ்யாவின் அண்ணன் பாலகுமார்,24, தனது தங்கையின் கணவர் கே.செல்வகுமாரிடம் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்த முயன்றார். அப்போது, கே.செல்வகுமாரின் நண்பரான எம். செல்வகுமார்,24, இதை தடுக்க முயன்றார். அப்போது, எம்.செல்வகுமாருக்கு கத்திகுத்து விழுந்தது. இதில், படுகாயமடைந்தவர் அரியலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து, குன்னம் போலீசார் வழக்கு பதிந்து பாலகுமாரன், அவரது தந்தை தங்கராசு, தாய் மகாலட்சுமி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X