சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்காக தாய் கொலை: மகள் கைது

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement


பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, சொத்துக்காக தாய், மகள் ஆகியோரை கொலை செய்த தாய், மகன் ஆகியோரை மருவத்துார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அய்யலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராணி,60, கணவரை இழந்த இவருக்கு வள்ளி,35, ராஜேஸ்வரி,32, என இரண்டு மகள்கள். மகள்கள் இருவரின் கணவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் ராஜேஸ்வரி தாய் வீட்டிலும், வள்ளி தனது 14 வயது மகனுடன் வேறு வீட்டிலும் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி ராஜேஸ்வரி அவரது வீட்டில் விஷம் சாப்பிட்டு சடலமாக கிடந்தார். ராணி மயங்கிய நிலையில் உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்தார். பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட, ராணி சிறிது நேரத்தில் இறந்தார்.

இது குறித்து, மருவத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், சொத்துக்களை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் தனது அம்மா ராணி மற்றும் சகோதரி ராஜேஸ்வரி ஆகியோரை வள்ளியும் அவரது 14 வயது மகனும் சேர்ந்து வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த மருவத்துார் போலீசார், பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வள்ளியை பெரம்பலுார் கிளை சிறையிலும், 14 வயது சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X