பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு பதஞ்சலி மருந்து: நிறுத்தி வைக்க ஆயுஷ் அமைச்சகம் உத்தரவு

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Baba Ramdev, Patanjali, Ayurvedic medicine, Covid-19, covid-19 recovery, coronavirus treatment, coronavirus, covid-19 outbreak, corona spread, india, Coronil and Swasari', Patanjali Yogpeeth, clinical trials

புதுடில்லி : 'கொரோனா தடுப்பு மருந்து பற்றி விளம்பரம் செய்ய வேண்டாம்; அது பற்றிய விபரங்களை உடன் தெரிவியுங்கள் ' என, யோகா குரு, ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

யோகா குரு, ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம், பல்வேறு ஆயுர்வேத பொருட்களையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரித்து வருகிறது.உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள பதஞ்சலி நிறுவனம், 'கொரோனில் மற்றும் ஸ்வாசரி' என்ற பெயரில் மருந்து ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதஞ்சலி அறிமுகப்படுத்திய கொரோனா தடுப்பு மருந்து பற்றிய விபரங்கள் தெரியவில்லை. அதில், இடம் பெற்றுள்ள மூலிகைககளின் விபரங்களும் தெரியவில்லை.


இது பற்றி, ஆயுஷ் அமைச்சகத்திடம் தெரிவிக்க, பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்து, எந்த மருத்துவமனையில், எந்த நோயாளிக்கு வழங்கி ஆய்வு செய்யப்பட்டது என்ற விபரத்தையும் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறும் வரையில், மருந்து பற்றி விளம்பரம் செய்ய கூடாது என, பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
26-ஜூன்-202011:50:10 IST Report Abuse
Tamilnesan பதஞ்சலி சில நூறு கோடிகளை மத்திய அரசுக்கு அன்பளிப்பாக (???) கொடுத்தால், மத்திய அரசு உடனே அனுமதி கொடுத்து விடும். இப்படி பட்ட ஜனநாயக நாடும், இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். மத்திய அரசு இன்னும் பொது மக்கள் உயிரை எவ்வளவு காவு கேட்கிறது?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202001:00:29 IST Report Abuse
தல புராணம் "Evidence based" ன்னு போட்டிருக்கே, எங்கே அந்த "evidence" ன்னு கேட்டா சங்கிகள் பதறுவது ஏன்? பொய்ய மட்டுமே சொல்லி பழகிடிச்சில்லே?
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூன்-202021:34:35 IST Report Abuse
krishna Mikka sariyana mudivu.Idhudhan Modi arasuda Singamdaa.Pathanjaliya irundhalum sodhanaikku pindhan anumadhi.Ippo aalvadhu desa virodha kollayar koodaram Congress Antonio maino aatchi illa.Maino irundha lanjam vaangikittu anumadhi kidaikkum.aana paarungaa appadium desa virodha moorga kootam Modi Baba Ramdev aalu ena poi solli thirium
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X