பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 64,603 பேருக்கு கொரோனா; 833 பேர் பலி

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆகவும், பலி எண்ணிக்கை 833 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 23,148 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,44,352 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


latest tamil news



இன்று சென்னையில் 21 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சியில் தலா 2 பேரும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை மற்றும் சேலத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 28 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
24-ஜூன்-202008:55:36 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போட்டு 833 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்..R.Kumaresan.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூன்-202008:23:25 IST Report Abuse
Chandramoulli மக்கள் இந்த செய்தியை பார்த்தும் நோயின் வீரியத்தை புரிந்து கொள்ளவில்லை . சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பரவ ஆரம்பித்து விட்டது . சென்னை மக்கள் அவர்களும் எந்த விதிமுறையும் பின்பற்ற மாட்டார்கள் . சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று பரப்பி விட்டனர் /
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
24-ஜூன்-202007:00:21 IST Report Abuse
Paramasivam இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று பரவியும் இன்னும் சில மக்கள் கொரோனாவோடு ஒன்றிணைந்து வெளியில் சுற்றி தொற்றை பெற்று பரப்பி வருகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X