தெலுங்கானாவில் உச்சம்; ஒரே நாளில் 872 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து, கடந்த 24 மணிநேரத்தில் 872 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல கட்டங்களாக நடவடிக்கையை எடுத்து வருகிறது. தெலுங்கானாவிலும் நோய் பாதிப்புகளை குறைக்க மாநில அரசு சிறப்பான திட்டங்களையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் செயல்படுத்தியது. இதனால் 25 மாவட்டங்கள் வரை நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது கடந்த சில தினங்களாக நோய் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.

மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,189 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தெலுங்கானாவின் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 8,674 ஆக அதிகரித்தது.


latest tamil news



நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகினர். தெலுங்கானாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 217 ஆக உள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஐதராபாத் நகர பகுதியில் 713 பேர், ரங்காரெட்டியில் 107 பேர், மேட்சலில் 16 பேர், சங்காரெட்டியில் 12 பேர், வாரங்கல் பகுதியில் 6 பேர், மான்ச்சேரியலில் 5 பேர், காமரெட்டி மற்றும் மெடாக்கில் தலா 3 பேர், ஜன்கான், கரீம்நகர் மற்றும் மஹபூப்நகரில் தலா 2 பேர் மற்றும் வாரங்கல் நகர்புறத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று 274 பேர் குணமடைந்தனர். தெலுங்கானாவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,005 ஆகவும், சிகிச்சையில் உள்ளவர்கள் 4,453 பேர் ஆவர். மாநிலத்தில் 60,243 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 51,569 பேருக்கு தொற்று இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X