கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன நிறுவனத்திற்கு அனுமதி

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

பீஜிங்: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் தடுப்பூசியினை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்க்க சீன நிறுவனம் ஒன்றிற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடைவிடாது முயற்சி செய்து வருகின்றனர். 12க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வெ்வேறு பரிசோதனை கட்டங்களில் உள்ளன.



latest tamil news



இந்நிலையில் சீனாவின் சோங்கிங் ஜிபெய் பயாலஜிக்கல் புரோடக்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியினை மனிதர்களிடம் சோதித்து பார்க்க அந்நிறுவனத்திற்கு சீன அரசு அனுமதி அளித்துள்ளது. அன்ஹூய் ஜிபெய் லாங்கோம் சீன நுண்னணுவியல் துறையும் இணைந்து இம்மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டது.


latest tamil news



சீனாவின் தேசிய மருந்துப் பொருட்கள் நிர்வாகத்துறை இப்பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் மட்டும் மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கக்கூடிய 6 தடுப்பூசி சோதனைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோலைபட்டி பார்த்திபன் எல்லாமும் நீ தான்நோய் கிருமியை உருவாக்கியதும் நீயே மருந்து கண்டுபிடித்திட்டோம்னு சொல்லுவதும் நீ அப்படின்னா நோய் கிருமியை பரப்பிலும் நீ தான
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
23-ஜூன்-202019:55:32 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா மறைச்சு வச்ச திருடரே பொருளை கண்டுபிடிச்சு தர்ற மாதிரி, நோயை பரப்பிவிட்ட சீனாவே அதற்கு மருந்து( ஏற்கனவே மருந்தை வச்சிக்கிட்டேதான் மற்ற நாடுகளுக்கு நோயை பரப்பினான்) கண்டுபிடிக்கிறா மாதிரி நடிப்பான். இங்க உள்ள கம்யூனிஸ்டுகள் புளங்காகிதம் அடைவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X