ஜோகோவிச்சிற்கு கொரோனா:டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெல்கிரேடு:உலகின் 'நம்பர்-1' டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.



latest tamil news




உலகின் 'நம்பர்-1' டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச். கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். அட்ரியாவில் முதல் தொடர் நடந்தது. இதில் சமூக இடைவெளியை ரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது.

டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் உலகத் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குரோஷியாவில் ஜோகோவிச் விளையாட இருந்த பைனல் உட்பட தொடர் முழுவதும் ரத்தானது.


latest tamil news



டிமிட்ரிரோவுக்கு எதிராக விளையாடிய மற்றொரு முன்னணி வீரர் குரோஷியாவின் போர்னா கோரிச்சிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தவிர செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கும் தொற்று இருப்பது தெரிந்தது.

அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், ஜோகோவிச்சும் சோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் தொற்று இருப்பது தெரியவர, இருவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
23-ஜூன்-202020:14:13 IST Report Abuse
அறவோன் Wish you a speedy recovery, Novak...🌷🌠👍
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X