'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
பெல்கிரேடு : உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.கொரோனா நெருக்கடியில் சிக்கியிருக்கும் டென்னிஸ் வீரர்களுக்கு உதவுவதற்காக, உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கண்காட்சி டென்னிஸ் போட்டியை சில தினங்களுக்கு முன் நடத்தினார். உலகின் பல முன்னணி வீரர்கள்
Novak Djokovic, Djokovic, CoronaVirus, Positive case, corona, tennis player, sports, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, world No. 1 in men's tennis, wife, Jelena,  Adria Tour, face masks, social distancing, corona patients, corona spread, new coronavirus cases

பெல்கிரேடு : உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

கொரோனா நெருக்கடியில் சிக்கியிருக்கும் டென்னிஸ் வீரர்களுக்கு உதவுவதற்காக, உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கண்காட்சி டென்னிஸ் போட்டியை சில தினங்களுக்கு முன் நடத்தினார். உலகின் பல முன்னணி வீரர்கள் இத்தொடரில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்வ பல்கேரிய வீரர் டிமிட்ரோவ்வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து நடந்த பரிசோதனையில், இத்தொடரில் பங்கேற்ற போர்னா கோரிக், விக்டர் டிரோய்க்கி ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது.


latest tamil newsஇந்நிலையில், ஜோகோவிச் தனது குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பில்லை. இதனையடுத்து ஜோகோவிச் தனது மனைவியுடன், செர்பிய தலைநகர் பெல்கிரேடில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X