சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

ஐந்தாவது கோள்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக பெரியது வியாழன். இது புறக்கோள்கள் வகையை சேர்ந்தது. சூரியனில் இருந்து ஐந்தாவது கோள். 1,42,800 கி.மீ., பரப்பளவு கொண்டது. இதன் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு பெரியது. இதற்கு 28 துணை கோள்கள் உள்ளன. முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது. வாயுக்களின் பிரதிபலிப்பால் பிரகாசமாக தெரிகிறது. சூரியனில் இருந்து 77.85 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. சூரியனை ஒருமுறை சுற்றிவர 11.9 ஆண்டுகள் ஆகிறது. தன்னைத் தானே 9 மணி 50 நிமிடங்களில் சுற்றி விடுகிறது.


தகவல் சுரங்கம்



இரண்டாவது நீளமான சுவர்

ராஜஸ்தானின் ராஜமந்த் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹ் கோட்டை, 15ம் நுாற்றாண்டில் ரானா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த கோட்டை மதில் சுவர் 38 கி.மீ., துாரம் நீளமானது. இது உலகின் நீளமான சீன பெருஞ்சுவருக்கு பின், இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,600 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்குள் 360 கோவில்கள் உள்ளன. இது இந்தியாவின் சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக விளங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X