ம.பி.,பா.ஜ.,பெண் எம்.பி.,திடீர் மயக்கம்: காங் சித்ரவதை என புகார்| BJP MP Pragya Thakur faints at party event in Bhopal | Dinamalar

ம.பி.,பா.ஜ.,பெண் எம்.பி.,திடீர் மயக்கம்: காங் சித்ரவதை என புகார்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (8)
Share

போபால்: பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ., எம்.பி., பிரயாக்ராஜ் திடீர் என மயக்கம் அடைந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.latest tamil newsம.பி.,மாநில தலைநகர் போபாலில் பாரதிய ஜனசங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநில தலைமையகத்தில் நடந்த விழாவில் ம.பி. முதல்வர் சிவராஜ்சிங்சவுகான் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மற்றும் போபால் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் கலந்துகொண்டனர் அப்போது பிரக்யா சிங் தாக்கூர் திடீர் என மயக்கம் அடைந்தார்.


latest tamil newsஅவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்.பி அலோக்சஞ்சர் கூறினார் .பின்னர் பிரக்யாக்சிங்தாக்கூர் கூறுகையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2008 ம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது பல சித்ரவதையால் காயங்கள் ஏற்பட்டன. என் கண்களிலும் மூளையிலும் சிறு வீக்கம் ஏற்பட்டுள்ளது. வலது கண்ணில் பார்வை மங்கலாக உள்ளது. இதன்காரணமாக அவ்வப்போது மயக்கம் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் காங்., ஆட்சியில் அனுபவித்த சித்ரவதைதான் காரணம் என கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X