இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லை பிரச்னையை தீர்த்து கொள்ளும்: ரஷ்யா| No outside help needed to resolve India-China border dispute: Russia | Dinamalar

இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லை பிரச்னையை தீர்த்து கொள்ளும்: ரஷ்யா

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (8)
Share
India, China, Russia, இந்தியா, சீனா, ரஷ்யா,  India-China border dispute, resolve India-China border dispute, help from outside, third party involvement, bilateral issues, peaceful resolution, boundary dispute, Russian foreign minister, Sergei Lavrov, RIC foreign ministers

மாஸ்கோ: எல்லை பிரச்னையை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும்; இதில் வெளிநாட்டினர் உதவி தேவையில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

சீன - இந்திய வீரர்கள் மோதலை தொடர்ந்து, ரஷ்யா நடத்தும், இந்தியா - சீனா - ரஷ்யா, கலந்து கொள்ளவிருந்த ஆர்.ஐ.சி முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள முதலில் இந்தியா மறுத்தது. பின்பு இதில் கலந்து கொண்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இதில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


latest tamil news


இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: இந்தியா, சீனா தங்கள் எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளும். அமைதியான முறையில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் உறுதியாக உள்ளன. இதுகுறித்து இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X