சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

எதுக்கு... சுரண்டறதுக்கா?

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 எதுக்கு... சுரண்டறதுக்கா?

எதுக்கு... சுரண்டறதுக்கா?

'தஞ்சாவூரில் இருந்து பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்' என, திருப்பனந்தாள் காசிமடம் சார்பில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தபால் அனுப்பும் போராட்டம், சமீபத்தில் நடந்தது.இதில், காசித் திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பேசுகையில், 'மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, நிர்வாக வசதி கருதி, புதிய தாலுகா, மாவட்டங்களை, தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், அனைத்து தகுதிகளையும் ஒருங்கே அமையப் பெற்ற கும்பகோணத்தை, புதிய மாவட்டமாகவும், திருப்பனந்தாளை, தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும்' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'போற போக்க பார்த்தா, ஒவ்வொரு ஊரும், தாலுகா ஆகிடும் போல... அஞ்சல் உள்ள ஊரை எல்லாம், மாவட்டம் ஆக்கிடலாம்...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'எதுக்கு, கட்சி ரீதியா, மாவட்டம், வட்டம்ன்னு போட்டு, எல்லாத்தையும் சுரண்டவா...' எனக் கோபமாய் பார்வையை வீச, இளம் நிருபர், 'கப்சிப்!'

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஜூன்-202006:08:19 IST Report Abuse
D.Ambujavalli முதல்வர் உட்கட்சியிலேயே வட்ட , மாவட்ட பதவிகளுக்கு அடிதடி தாங்காமல் குக்கிராமங்களைக்கூட தாலுக்கா ஆக்கி, ‘இஷ்டப்படி ஆட்டம் போட’ வசதி செய்து கொடுத்து நிம்மதியைத் தேடிக்கொண்டாலும் வியப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X