சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நியாயம் வேண்டாமா?

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 நியாயம் வேண்டாமா?

நியாயம் வேண்டாமா?

'மக்களின் வரிப் பணத்தில் மஞ்சள் குளிப்பதே அரசியல்வாதிகளுக்கு வேலையாகி விட்டது' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவைப் பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், அந்த மாநில மக்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் சந்திரசேகர ராவ். பதவியில் அமர்ந்ததும், அதைப் பற்றி மறந்து விட்டார். சமீபத்தில் அவரைச் சந்தித்த கட்சி நிர்வாகிகள், 'தலைவரே... ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றையாவது நிறைவேற்றுங்கள்; இல்லையெனில், அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க போக முடியாது. மக்கள் கோபமாக உள்ளனர்' என, அறிவுறுத்தினர்.
இதைக் கேட்டதும் சந்திரசேகர ராவுக்கு பயம் வந்து விட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேலைகளில் மும்முரமாக இறங்கிஉள்ளார். முதல் கட்டமாக, வீடு இல்லாத ஏழைகளுக்கு, அரசு சார்பில் இலவச வீடு கட்டித் தரும் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கியுள்ளார். ஒரு சில மாவட்டங்களில், வீடுகள் ரெடியாகி விட்டன. இந்த வீடுகளுக்கு, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கொடியில் உள்ள நிறமான, இளம் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதைப் பார்த்த எதிர்க்கட்சிகள், 'அரசு பணத்தில் கட்டும் வீடுகளுக்கு, உங்கள் கட்சியின் கொடி நிறத்தை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாலும், அதிலும், ஒரு நியாயம் வேண்டாமா?' என, கொதிப்புடன் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X