சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: சென்னையை தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும், கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கல்லுாரி இறுதியாண்டு தேர்வுகளை, ரத்து செய்து, முந்தைய பருவ மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: உண்மையில் நல்ல கோரிக்கை தான். இனிமேலும் கல்லுாரிகளை திறந்து, பாடங்களை நடத்தி, தேர்வுகளை வைப்பது சரிப்பட்டு வராது என்கிறீர்கள். கண்டிப்பாக, உங்களின் இந்த கோரிக்கைக்கு, கல்லுாரி மாணவர்கள் வரவேற்பு அளிப்பர்; அப்படியே உங்கள் கட்சியில் சேர்வர் என்று மட்டும் நினைக்காதீர்கள்; அது, 'டவுட்'டு தான்!


தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்:
தமிழக பா.ஜ.,வின் வங்கிக் கடன் வாங்க உதவும், தாமரை திட்டத்தை பார்த்து, தமிழக காங்., தலைவர் அழகிரி திகிலடைந்துள்ளார். எனவே, பா.ஜ.,வை மிரட்டும் தொனியில், வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். கடனை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காக, காங்., அறிவித்த, 'பூஜாரி லோன்' திட்டம் அல்ல இது.

'டவுட்' தனபாலு: மத்தியில், காங்., ஆட்சியின் போது, சாதாரண ஏழைகளுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதே இல்லை; பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தான், வங்கிகளில் வரவு - செலவு வைத்திருந்தனர் என்ற உண்மையை, நீங்கள் மறக்கவில்லை என்பது போல, அந்த கால மக்களும் மறந்திருக்க மாட்டார்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!



ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:
மக்களைக் கடுமையாக பாதிக்கிற நடவடிக்கைகளை, ரயில்வே துறை கைவிட வேண்டும். பயணியர் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கோவை, பாலக்காடு வரையிலும், ஒரு மணி நேரத்திற்கு, ஒரு பயணியர் ரயில் ஓடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: உண்மையில், ரயில்கள் ஓடத் துவங்கினால் தான், நாட்டில் இயல்பு நிலை திரும்பியது என்பதை உறுதிபடுத்த முடியும். நாட்டின் ரத்த நாளங்கள் சுருண்டுள்ளன; அதை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அதனால், நாட்டின் பொருளாதாரம் சுறுசுறுப்படையும் என்பதில், யாருக்கும் எந்த, 'டவுட்'டும் வராது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X