சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பணிக்கு வர பயப்படும் சி.எம்.டி.ஏ., ஊழியர்கள்!

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 பணிக்கு வர பயப்படும் சி.எம்.டி.ஏ., ஊழியர்கள்!

பணிக்கு வர பயப்படும் சி.எம்.டி.ஏ., ஊழியர்கள்!

''சமுதாய தலைவர்களை சந்திச்சு, ஆதரவு திரட்டிட்டு இருக்காவ வே...'' என்றபடியே, திண்ணை விவாதத்தை ஆரம்பித்தார்,
அண்ணாச்சி.''யாருங்க அவங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய, பா.ஜ., அரசு, ரெண்டாவது முறையா பதவியேற்று, ரெண்டாவது வருஷம் துவங்கியிருக்கு... இது சம்பந்தமா, மக்களுக்கு, பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை, மதுரை பா.ஜ., நிர்வாகிகள்,
புத்தகமா தயாரிச்சிருக்காவ வே...
''இந்த புத்தகத்தை, ஒவ்வொரு சமுதாய தலைவர்களா பார்த்து குடுத்து, ஆதரவு திரட்டிட்டு இருக்காவ...
''அதோட, தொழில் பிரமுகர்கள், நடுநிலையாளர்களையும் பார்த்து, கொரோனா தடுப்பு பணியில, மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கி, சட்டசபை தேர்தலுக்கு, இப்பவே ஆதரவு திரட்டிட்டு இருக்காவ...
''மதுரை பா.ஜ., வினர், இந்த புத்தகமும், கையுமா தான் திரியுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''குடோன்ல, 'சரக்கு' விற்பனை படுஜோரா நடக்குது பா...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அன்வர்பாய்.
''என்ன சரக்கை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''டாஸ்மாக் சரக்கு தான் பா... கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டி ஊராட்சியில, மூணு குடோன்கள் இருக்கு... இங்க, பெட்டி பெட்டியா டாஸ்மாக் சரக்குகளை பதுக்கி வச்சு, விற்பனை செய்றாங்க பா...
''கடையை விட, ஒரு பாட்டிலுக்கு, 100 ரூபாய் அதிகம்... 24 மணி நேரம் போனாலும், சரக்கு கிடைக்கும் பா... இது பத்தி, கோவில்பாளையம் போலீஸ்ல, பொதுமக்கள் பலமுறை புகார் குடுத்து பார்த்தாச்சு...
''போலீசாரும், யாரையாவது பிடிச்சு வழக்கு போடுறாங்க... வழக்குல சிக்குனவர், மறுபடியும் அதே தொழிலை பண்றாரு பா...
''ஆளுங்கட்சி புள்ளிகள் தயவு இருக்கிறதால, சரக்கு விற்பனையை தடுக்க முடியலை... அதனால, பொதுமக்கள் சீக்கிரமே மறியல் போராட்டம் பண்ண, திட்டம் போட்டிருக்காங்க பா...''
என்றார், அன்வர்பாய்.''வேலைக்கு வரவே பயப்படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுல, வசூல் அதிகம்கறது, லோகத்துக்கே தெரிஞ்ச உண்மை...
இங்க, எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் நடக்கலை ஓய்...''அதே நேரம், வசூல் பாதிக்கப்படக் கூடாதுங்கறத்துக்காக, பணியாளர்களை சில அதிகாரிகள், கட்டாயப்படுத்தி வேலைக்கு வரச் சொல்றா... இப்படி வந்த தற்காலிக, நிரந்தர பணியாளர்கள், 20 பேருக்கு கொரோனா வந்துடுத்தாம் ஓய்...
''ஆனா, இந்த விபரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்காம இருக்கணும்ன்னு, அதிகாரிகளே சொல்றதா தகவல்... ''இதனால, இங்க வேலைக்கு வரதுக்கே, ஊழியர்கள், கீழ்மட்ட அதிகாரிகள் பயப்படறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அந்தோணிசாமி வீட்டு இஞ்சி டீயை குடித்து முடித்து, அனைவரும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
24-ஜூன்-202008:37:11 IST Report Abuse
Muraleedharan.M மீகவும் சரி
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
24-ஜூன்-202007:02:49 IST Report Abuse
Muraleedharan.M லஞ்சகாரர்கள் இவங்கதான் கொரானோ நிச்சயம் தாக்கும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஜூன்-202006:12:20 IST Report Abuse
D.Ambujavalli பல அரசு அலுவலகங்களிலும் குவிந்துள்ள வேலைப்பளு, பசையான துறைகளில் வசூல் சுணக்கம் இவைகளைக் கருத்தில் கொண்டு நோய் தொற்றை மறைத்து, இவர்களே பரப்பிகளாக உள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X