அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா காலத்திலும் ஊழல்: ஸ்டாலின்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
சென்னை : 'அதிக விலை கொடுத்து வாங்கிய, 'தெர்மல் ஸ்கேனர்' கருவிகளின் தரம் படுமோசமாக உள்ளது. கொரோனா காலத்திலும், அ.தி.மு.க., அரசு, ஊழல் செய்வதை கொள்கையாக கொண்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:குதிரை களவு போன பின், லாயத்தை பூட்டி வைப்பதை போல, சென்னையில், கொரோனா தொற்று அதிகமாகி, உயிர்பலிகளும் கூடி, அச்சம் மிகுந்த சூழ்நிலையில், ஊரடங்குக்குள்
கொரோனா காலத்திலும் ஊழல்: ஸ்டாலின், DMK president, M K Stalin, Covid-19 purchases, aiadmk, tn govt, tamil nadu, corona crisis, covid 19, coronavirus

சென்னை : 'அதிக விலை கொடுத்து வாங்கிய, 'தெர்மல் ஸ்கேனர்' கருவிகளின் தரம் படுமோசமாக உள்ளது. கொரோனா காலத்திலும், அ.தி.மு.க., அரசு, ஊழல் செய்வதை கொள்கையாக கொண்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
குதிரை களவு போன பின், லாயத்தை பூட்டி வைப்பதை போல, சென்னையில், கொரோனா தொற்று அதிகமாகி, உயிர்பலிகளும் கூடி, அச்சம் மிகுந்த சூழ்நிலையில், ஊரடங்குக்குள் ஊரடங்கு என, நிலைமை கடுமையாக்கப்பட்டு உள்ளது.

இந்த நேரத்தில், ஒவ்வொரு வீடாக சென்று, மக்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க, இந்திய நிறுவனம் ஒன்றின் வாயிலாக, சீனாவில் இருந்து, 'பிகே - 58 பி' வகையிலான, 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியை, சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.
அதிக விலை கொடுத்து வாங்கிய, தெர்மல் ஸ்கேனர் கருவிகளின் தரமோ படுமோசமாக உள்ளது. களப்பணியாளர்கள், யார், யாரை சோதனை செய்கிறார்களோ, அவர்கள் அனைவரது உடல் வெப்ப நிலையையும், இந்த தெர்மல் ஸ்கேனர், ஒரே மாதிரியாக, 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது.
மனித உடல் வெப்ப நிலையின் சராசரி அளவை கடந்து, கடும் காய்ச்சல் உள்ளது போல காட்டும் தெர்மல் ஸ்கேனரால், நோய் தொற்று காலத்தில், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனை கருவிகள் வரை, இந்த கொரோனா காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளை அடிப்பதையை கொள்கையாக கொண்டிருக்கும் அ.தி.மு.க., அரசு, இதுவரை நடந்தவை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


விசா நிறுத்தமா? ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை:கொரோனா நோய் தொற்றால், உலக பொருளாதாரமே எதிர்மறையான விளைவுகளை வேகமாக சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில், 'எச்., 1பி, எச்., 2பி, எல் 1' விசாக்கள் மற்றும் தற்காலிக பணி விசாக்களை நிறுத்தி வைக்கும், அமெரிக்க அதிபரின் அறிவிப்பு, அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது.

தமிழகத்தில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், மேற்கண்ட விசாக்களை நம்பியே, வாடிக்கையாளர்களின் முக்கிய திட்ட செயல்பாடுகளை முடித்துக் கொடுக்க, பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன.
அதற்கும், அமெரிக்க அதிபரின் முடிவு, சிக்கலை ஏற்படுத்தி, இந்தியாவுக்கு, 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பையும் உருவாக்கி உள்ளது. இந்த முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு, அமெரிக்க அரசுக்கு, மத்திய அரசு உடனே அழுத்தம் தர வேண்டும்
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூன்-202012:21:30 IST Report Abuse
skv srinivasankrishnaveni ENDAAPPAA உன் அப்பா தான் பலலகஷமலே சொத்து சேர்த்துட்டாருஇல்லே இன்னம் பணவெறி அடங்கலியா உங்களுக்கெல்லாம் நம்ம நாட்டின் எகானாமியே உங்க குடும்பங்க அண்ட் சோனியா பசிதம்பரம்போன்றவவ்ர்களிடம் இருக்கே அதெல்லாம் பிடுங்கினால் நம்ம நாடு செழிப்பாகஇருக்கும் அய்யா
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூன்-202016:59:41 IST Report Abuse
skv srinivasankrishnaveniSORRY NOT MANY LAKHS MANYMANY CRORES...
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
24-ஜூன்-202023:13:49 IST Report Abuse
unmaitamil திருடனுக்கு யாரைப்பார்த்தாலும் திருடனாகவே தோன்றும். விலை மாதுவிற்கும் எந்த பெண்ணை பார்த்தாலும், தன்னைப்போலவே தோன்றும் என்பார்கள். அதுபோல் இந்த ஊழல் குடும்ப நாயகனுக்கு, யார் எதை செய்தாலும் அதில் ஊழல் உள்ளதுபோல் தோன்றும். இது இவர்கள் குடும்ப பாரம்பரியம். MGR. ரேயே ஊழல் செய்தவர் என்று புலம்பியவர் இவர் தந்தை முக. இவர் உளறலை மக்கள் யாரும் மதிப்பதில்லை. தனக்கு காரோண பாதிப்பு இல்லை என்பதை காட்டிக்கொள்ள தினமும் அறிக்கை விடுகிறார். அவ்வளவுதான்.
Rate this:
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202022:12:36 IST Report Abuse
Mani அண்ணே நீங்க மூடுங்க .... எத பத்தி யார் பேசறது. அப்படினா கொறோனா இல்லன்னா ஊழல் பண்ணலாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X