சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஆர்வம் தான் சமையலுக்கு அவசியம்!

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
ஆர்வம் தான் சமையலுக்கு அவசியம்!

சமையலில் ஆர்வம் வந்தது எப்படி என, பிரபல செப் தாமு: எங்கள் கூட்டுக் குடும்பத்தில் அம்மா, அண்ணி எல்லாரும் சேர்ந்து சமைப்பர். அப்போதெல்லாம் விறகு அடுப்பு அல்லது பம்ப் ஸ்டவ் தான். அதில் சாதம் வடித்து, உருளைக்கிழங்கு மசால் செய்து, சாம்பார், ரசம் வைக்க மூன்று மணி நேரம் ஆகும். ஓர் அடுப்பில் சாதம் வேக, கொடி அடுப்பில் பருப்பு வேக, அந்த அடுப்புகள் அணையாமல் பார்த்துக் கொள்ள எனத் திணறிக் கொண்டிருப்பர்.
என், 10 வயதில், தட்டில் கிடைக்கும் உணவைத் தாண்டி அடுப்படியில் நடக்கும் சமையலையும் கவனிக்க ஆரம்பித்தேன். அந்த ஆர்வம் தான் இப்போது என்னை இப்படி உங்கள் முன் நிறுத்தியுள்ளது.உடல்நிலை, மனநிலை, சூழ்நிலைக் காரணங்களால் சமைக்க இயலாத நாட்களில், வெளியிலோ, 'ஆன்லைனில் ஆர்டர்' செய்தோ சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், வெளி உணவைச் சாப்பிடும் உந்துதலாலேயே வீட்டில் சமைக்காமல் இருப்பது கூடாது.
இப்படியே போனால் நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இவை எல்லாமே நம் கையை விட்டுப் போய்விடும். ஆரோக்கியம் பேணப்பட வேண்டும் என்றால், வீட்டுச் சமையலே சிறந்தது.

வாரத்தில் மூன்று நாட்களாவது, பாரம்பரிய சமையல் மணக்க வேண்டும். அவை உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் அமையும்.முன்பெல்லாம் இளைய தலைமுறையினர் அம்மா, மாமியார் என்று சமையல் கற்றுக் கொண்டனர். இன்று சமைக்க ஆரம்பிக்கும் வயதில் அவர்கள் விட்டு நீங்கி வெளியூர், வெளிநாடு என்று சென்று விடுகின்றனர். மேலும் சிலருக்கு வழக்கமான சமையலைத் தாண்டி, 'ரெஸ்ட்டாரன்ட்' உணவுகள் முதல் கான்டினென்டல் உணவுகள் வரை விதவிதமாகச் சமைக்க ஆர்வம் ஏற்படுகிறது. இவர்களுக்கெல்லாம், 'யூ டியுப்' சமையல் வீடியோக்கள் கை கொடுக்கின்றன. அவற்றில், அளவு சிலருக்குப் பிடிபடாமல் இருக்கலாம்.என் வீடியோக்களில், 'கால் கிலோ தக்காளி, கொஞ்சம் இஞ்சி, பூண்டு, தேவையான அளவு வெங்காயம், சிறிதளவு மிளகாய்த்துாள், ஒரு பின்ச் மஞ்சள் துாள்...' என என் கை அளவில் எடுத்துப் போட்டுக் காட்டுவேன். சமையலில் அளவு என்பது, கைப்பழக்கத்தில் வந்துவிடும். ஆர்வம் தான் முக்கியம்.ஆணும் பெண்ணும் சேர்ந்து சமைக்கும் போது, அவர்களுக்கு இடையேயான அந்நியோன்யம் அதிகரிக்கும் என்பது உளவியலாளர்கள் சொல்வது.
உதாரணமாக, பிரியாணி தயாரிக்கும்போது இருவரும் சேர்ந்து அதன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு, இறுதியாக பிரியாணி சாப்பிட, இருவரும் சேர்ந்து அமரும்போது, அந்த மணம், சுவை எல்லாம் வழக்கத்தைவிட நிச்சயம் சிறப்பாக இருக்கும். எனவே, ஆண்களும் சமையல் செய்வது அவசியம். கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் அது அத்தியாவசிய
மானதும் கூட!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X