டில்லியில் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா; 68 பேர் பலி| Delhi reports 3,947 new COVID-19 cases | Dinamalar

டில்லியில் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா; 68 பேர் பலி

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020
Share
புதுடில்லி: தலைநகர் டில்லியில் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 68 பேர் ஒரே நாளில் பலியாகினர்.கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம், குணமடைவோரின் விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டில் வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்கள் பட்டியலில், மஹாராஷ்டிரா, முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி, டில்லி, இரண்டாவது
Delhi, coronavirus, covid-19, corona, new coronavirus cases, positive cases, corona patients, corona death, corona in delhi, corona spread, india, covid-19 pandemic, covid-19, டில்லி, கொரோனா

புதுடில்லி: தலைநகர் டில்லியில் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 68 பேர் ஒரே நாளில் பலியாகினர்.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம், குணமடைவோரின் விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டில் வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்கள் பட்டியலில், மஹாராஷ்டிரா, முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி, டில்லி, இரண்டாவது இடத்திற்கு வந்தது.


latest tamil news


இந்நிலையில், டில்லியில் புதிதாக 3,,947 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, இங்கு வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 66 ஆயிரத்து, 602 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 68 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி 2,301 ஆக உயர்ந்துள்ளது. 24 ஆயிரத்து, 988 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 39 ஆயிரத்து, 313 பேர் குணமடைந்து உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X