தேனி மாவட்டம் போடியில் 7 போலீசாருக்கு கொரோனா| 7 cops test COVID-19 positive in Theni | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனி மாவட்டம் போடியில் 7 போலீசாருக்கு கொரோனா

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (2)
Share

போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம் போடியில் ஏழு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
போடிநாயக்கனூர் நகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசாருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒரு எஸ்.ஐ., உட்பட ஏழு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.



latest tamil news



இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்த போலீசார் மற்றும் குடும்பத்தார்கள், உறவினர்கள் தங்களை தனிமைப்படுத்தி்க் கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் கம்பம் வடக்கு போலீஸ் நிலைய ஏட்டு ஒருவருக்கும் கொரோனா உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேனி மாவட்டத்தில் மொத்தம் 284 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 129 பேர் குணமடைந்தனர். இருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X