எல்லை பிரச்னைக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement
புதுடில்லி : ''இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசின், தவறான நிர்வாகமே காரணம்,'' என, காங்., தலைவர், சோனியா கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின், உயர்நிலை குழுவான, காரியக் கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது. சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த, நம் ராணுவ வீரர்களுக்கு, இதில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், சோனியா
எல்லை பிரச்னை,மோடி அரசு, தவறான நிர்வாகம், Sonia, Manmohan, Modi govt, India-China border crisis, Coronavirus spread

புதுடில்லி : ''இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசின், தவறான நிர்வாகமே காரணம்,'' என, காங்., தலைவர், சோனியா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின், உயர்நிலை குழுவான, காரியக் கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது. சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த, நம் ராணுவ வீரர்களுக்கு, இதில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், சோனியா பேசியதாவது:

துரதிருஷ்டம் எப்போதும் தனியாக வராது. இந்தியா தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், சீனாவுடனான எல்லைப் பிரச்னையும் சேர்ந்துள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு, பா.ஜ., தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளே காரணம். பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நிர்வாக செயலின்மையே மிக முக்கிய காரணம்.
கடந்த, ஏப்., மே மாதங்களிலேயே எல்லையில் பிரச்னை துவங்கியுள்ளது. ஆனால், வழக்கம்போல், இதை பா.ஜ., அரசு மறுத்துள்ளது. பிரச்னை சுமுகமாக தீர்த்திருக்க வேண்டிய நேரத்தில், மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் அரசுக்கும், ராணுவத்துக்கும் முதல் முதலில் காங்கிரஸ்தான் ஆதரவு தெரிவித்தது. ஆனால், இந்தப் பிரச்னையை, மோடி அரசு தவறாக கையாள்வதாக, மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. நல்ல ஆலோசனைகளை, மோடி அரசு எப்போதும் ஏற்பது கிடையாது.

கொரோனா வைரஸ் பிரச்னையிலும், மோடி அரசின் தவறான நிர்வாகத்தால், மிகப் பெரிய பாதிப்பை நாம் சந்தித்து வருகிறோம். நிலைமை கைமீறி போன உடன், மாநிலங்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டது. இந்த விவகாரத்தில், நாட்டில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள, ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1 சதவீதம் செலவிடப்படும் என, திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.

உலகம் எங்கும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து, 17வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 42 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சிக்கலை நாடு சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில், காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசுகையில், ''சீன ராணுவம் ஆக்கிரமிக்கவில்லை என சீனாவுக்கு ஆதரவாக, பிரதமர் மோடி பேசியுள்ளார். ''இதன் மூலம், நம் நாட்டின் நிலைப்பாட்டை சீர்குலைத்ததுடன், நம் ராணுவத்தின் முதுகில் குத்தியுள்ளார். இது
மோடி அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் முழு தோல்வியாகும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202022:25:26 IST Report Abuse
Mahesh ●'Aksai Chin' : Lost to China in 1962. ●'Karakoram Pass' : Lost to China in 1963. ●'Tia Pangnak' : Lost to China in 2008. ●'Chabji Valley' : Lost to China in 2008. ●'Doom Cheley' : Lost to China in 2009. ●'Demzok' : Lost to China in 2012. ●'Raki Nula' : Lost to China in 2013. Post 2014 ◆'Doklam' : China failed in 2017. ◆'Lipulekh' : China failed in 2020. ◆'Pangong Tso' : China failed in 2020. ◆'Galwan Valley' : China failed in 2020.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
24-ஜூன்-202022:20:14 IST Report Abuse
mrsethuraman  உங்கள் கட்சிக்கு தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
24-ஜூன்-202020:27:13 IST Report Abuse
Mithun வெறும் 50 இந்திய வீரர்கள் 350 சீன வீரர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதை இருட்டடிப்பு செய்ய அம்மாவும், மகனும் கிளம்பிவிட்டனர்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
24-ஜூன்-202023:39:49 IST Report Abuse
Amal Anandanநம் பக்கத்தில் 20 பேர் இறந்துள்ளனர், 50 சதுர கிலோமீட்டரை இழந்துள்ளோம். வெற்று புகழுரை நாட்டிற்கு உதவாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X