2 மீட்டர் லட்சியம், ஒரு மீட்டர் நிச்சயம்: போரீஸ் ஜான்சனின் ஊரடங்கு விதி!

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் சமூக இடைவெளி விதியை தளர்த்தி வணிகங்களை திறக்க உள்ளனர். அப்போது முடிந்த வரை 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி நிச்சயம் என பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் உலகளவில் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 42,647 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தப்படியாக மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஜூலை 4 முதல் சமூக இடைவெளி விதியை தளர்த்தி பப்கள், உணவகங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவற்றுக்கு திறக்க அனுமதி தந்துள்ளனர்.

இது குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், அபாயங்களை பற்றி முழுதாக அறிந்து மக்கள் தங்கள் பொது அறிவை பயன்படுத்துவார்கள் என்பதை நம்புகிறோம். நாம் எவ்வளவு திறக்கிறோமோ, அவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் 2 மீட்டருக்குள் இருக்கும்போது நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவதை தவிருங்கள். 2 மீட்டரை இடைவெளியை கடைபிடிக்க கூடிய இடத்தில் அவற்றை கடைபிடியுங்கள். அரசாங்கத்தால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் திறக்க முடியாது என்றார்.


latest tamil news



மீண்டும் திறக்க கூடியவை என ஒரு பட்டியல் தயாரித்துள்ளனர். அதில் வாடிக்கையாளர் தொடர்பு எண்களை பெற்றுக்கொண்டு பப்கள், பார்கள், உணவகங்கள், ஹாலிடே அபார்ட்மென்ட்டுகள், தியேட்டர்கள் மற்றும் இசை அரங்குகள், பூங்காக்க, 30 நபர்கள் பங்கேற்கக் கூடிய திருமணம், வழிபாட்டுத் தலங்கள், தீம் பார்க்குகள், அருங்காட்சியகங்கள், மிருகக் காட்சிசாலைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
24-ஜூன்-202007:25:36 IST Report Abuse
Rpalnivelu திருட்டு கட்சி ஸ்தாபகர் அருள் வாக்கு இப்போது இங்கிலாந்து வரை பாய்ந்து விட்டதே
Rate this:
Cancel
24-ஜூன்-202005:38:53 IST Report Abuse
ஆப்பு பலே...பலே... மூணு படி லட்சியம்... ஒரு படி நிச்சயம்...நு திட்டம் மாதிரி கேட்குதே...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202001:33:03 IST Report Abuse
Rajagopal இதைக் கடை பிடிக்காவிட்டால் மண்ணுக்குள்ளே ஒரு மீட்டர் ஆழத்தில் படுக்கை நிச்சயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X