பொது செய்தி

இந்தியா

கொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி மன்னர்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
கொரோனா காலம் , அதிகம் சொத்து  ,தடுப்பூசி மன்னர், Covid-19, vaccine king, Cyrus Poonawalla, wealth, India, Report

மும்பை : கொரோனா தொற்று நோய் காலத்தில், இந்தியாவில், முகேஷ் அம்பானியை விட, ஒருவர் அதிகம் சொத்து சேர்த்துள்ளார்.

'தடுப்பூசி மன்னர்' என அழைக்கப்படும், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா'வின் நிறுவனர், சைரஸ் பூனவாலா தான், கொரோனா காலத்தில், இந்தியாவிலேயே மிக அதிகளவில் சொத்து சேர்த்துள்ளார்.

அதுமட்டுமல்ல; உலகளவில், இக்காலகட்டத்தில் அதிகளவு செல்வம் சேர்த்த நபர்கள் வரிசையில், ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்.கடந்த நான்கு மாதங்களில், இவரது சொத்து மதிப்பு, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை அடுத்து, மே 31ம் தேதி நிலவரப்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில், 57 இடங்கள் முன்னேறி, 86வது இடத்தை பிடித்துள்ளார் என, 'ஹுருன்' ஆராய்ச்சி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.

புனேவை சேர்ந்த பூனவாலாவின், 'சீரம்' நிறுவனம், ஏற்கனவே, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாக உள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் வணிகம் மேலும் அதிகரித்துள்ளது.சமீபத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட, கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்து வழங்க, 'அஸ்ட்ராசெனெகா' நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை, 'சீரம்' மேற்கொண்டது. இதன்படி, 'சீரம்' நிறுவனம், 100 கோடி தடுப்பூசி மருந்தை தயாரித்து கொடுக்க வேண்டும்.

முகேஷ் அம்பானி, இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற நிலையை தொடர்கிறார்.முதல் இரண்டு மாதங்களில், கடுமையான இழப்பை அவர் சந்தித்தாலும், அடுத்த இரு மாதங்களில், 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்தது. இதையடுத்து, உலக பணக்காரர் வரிசையில், 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.இருப்பினும், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, கொரோனா காலத்துக்கு முன் இருந்ததைவிட, 1 சதவீதம் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
24-ஜூன்-202014:03:36 IST Report Abuse
J.Isaac வேஷமாகவே மனுஷன் திரிகிறான்.இரவு பகலாக தூக்கம் இல்லாமல் உழைக்கிறான். ஆஸ்தியை சேர்க்கிறான். யார் அதை அனுபவிப்பார்கள் என்று அறியான். இதுவும் மாயை.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
25-ஜூன்-202006:24:46 IST Report Abuse
 Muruga Velvaksin thayaarithu ulagathukku sevai seigiraar ...munnani niruvanamaana glaxo vaksin thayaarippil ulagathileye munnani ...aasta zenkaa kaantraakt murayil ivar kampenikku aardar kodutthulladhu ..neenga uzhaikkiradhu avalai nenachu urala idikkira varaity.....
Rate this:
Cancel
24-ஜூன்-202010:32:18 IST Report Abuse
நக்கல் இனி அதானி, அம்பானியுடன் இவரையும் சேர்த்து குரல் கொடுக்கவேண்டும்
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
24-ஜூன்-202010:18:16 IST Report Abuse
நிலா எங்கள் தமிழ்நாட்டு ஜப்பான் முதல்வர் குடும்பத்தை விட இவர் அதிகம் சொத்து வைத்துள்ளார்? நம்பமுடியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X