பொது செய்தி

தமிழ்நாடு

கருவேப்பம்பூண்டி குளம் சீரமைப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : கருவேப்பம்பூண்டி காலனி குளம், 2 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவில் இருந்து, சில தளர்வு ஏற்படுத்திய பின், உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஏரி, குளம், கால்வாய் என, பல வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, கருவேப்பம்பூண்டி காலனி குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி கூறுகையில், 'ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 2 லட்சம் ரூபாயில், கருவேப்பம்பூண்டி காலனி குளத்திற்கு படித்துறை மற்றும் வரத்து கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X