சங்கராபுரம் நகரில் கடைகள் அடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் நகரில் கடைகள் அடைப்பு

Added : ஜூன் 23, 2020
Share

சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் கொரோனா பரவலைத் தடுக்க மாலை 3:00 மணியுடன் கடைகள் மூடப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பற்றிய அச்சம் இன்றி மக்கள் எப்போதும் போல் கூட்டம் கூட்டமாகவும், முகக் கவசம் அணியாமலும் சுற்றி வருகின்றனர்.இதனால் நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் சங்கராபுரம் நகரில் கலெக்டர் கிரண் குராலா உத்தரவின் பேரில் சங்கராபுரம் நகரில் அனைத்து கடைகளும் காலை 7:00 மணிக்கு திறந்து மாலை 3:00 மணியுடன் மூடப்பட்டன.இதனால், கடைவீதிகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X