சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் பகுதிக்கு வெளியாட்கள் வந்தால்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதிக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து யாராவது வந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க சங்கராபுரம் தாசில்தார் நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்கராபுரம் பகுதியிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் மும்பை, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் தொற்று அதிகரித்து வருகிறது.சங்கராபுரம் வட்டத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கிராமங்களுக்கு வருபவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் முலம் தொற்று பரவலை தடுக்க முடியும். இது குறித்து சங்கராபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சங்கராபுரம் நகரில் கடைகளை ஆய்வு செய்ததில் பல கடைகளில் உரிமையாளர்கள் முகக் கவசம் அணியாமலும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. முதல் முறை அபராதம் மட்டுமும். அடுத்த முறை சோதனையில் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளை பூட்டி சீல் வைக்கவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X