பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கும் நிவாரணம் வேண்டும்: வரதராஜபுரம் மக்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் : 'ஊரடங்கு அமல்படுத்தியதால் எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்' என, காஞ்சி மாவட்ட காவல் எல்லையை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், 19 முதல், வரும், 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மாங்காடு, குன்றத்துார் காவல் நிலைய எல்லையில் அடங்கிய இரண்டு பேரூராட்சி, 18 ஊராட்சிகளில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, அரசின், 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஆனால், சென்னை பெருநகர காவல் எல்லையில் இல்லாமல், காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லையில் அடங்கியுள்ள படப்பை, வரதராஜபுரம் பகுதிகளில் வசிப்போருக்கு, அந்நிவாரணம் வழங்கப்படவில்லை.அதே போல், எருமையூர், சோமங்கலம், மணிமங்கலம், நடுவீரப்பட்டு ஆகிய ஊராட்சி பகுதிகளில், மதியம், 2:00 மணிக்கு மேல் கடைகளை மூட கோருவதால், வியாபாரிகளும் வருமானம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.அதனால், மேற்கண்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

கிராமங்களில் எதிர்பார்ப்புதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய பேரூராட்சிகளில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதிகளில் மட்டும், அரசின் நிவாரணம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், ஊரடங்கு அல்லாத, ஒன்றிய கிராம பகுதிகளில், அரசின் நிதி வழங்கப்படுவதில்லை. தடப்பெரும்பாக்கம், மேட்டுப்பாளையம், மெதுார் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், தொழில் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு, நகர் பகுதியில் வழங்குவதுபோல், கிராம பகுதிகளுக்கும், நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X