ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து, எள் வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து, எள் வரத்து அதிகரிப்பு

Added : ஜூன் 23, 2020
Share

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடத்தில், கருப்பு உளுந்து மற்றும் எள் மூட்டைகளின் வரத்து நேற்று அதிகரித்தது.

உளுந்துார்பேட்டை ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடத்தில், பாண்டூர், களமருதுார், செங்குறிச்சி, பாதுார், சின்னக்குப்பம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை இங்கு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று கருப்பு உளுந்து மற்றும் எள் விளை பொருட்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. 100 கிலோ ஒரு மூட்டை இருப்பு கொண்ட கருப்பு உளுந்து 50 மூட்டைகளும், 80 கிலோ ஒரு மூட்டையில் கொள்ளளவு பிடிக்கும் எள் 150 மூட்டைகளும் வந்தன. இதில், கருப்பு உளுந்து 5,500 ரூபாய் முதல் 6,829 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்பவும், எள் 6,500 ரூபாய் முதல் 7,600 ரூபாய் வரையிலும் விலை போனது.

இந்த கருப்பு உளுந்து உளுந்துார்பேட்டை அருகே செங்குறிச்சி, ஆதனுார், கூட்டடி கள்ளக்குறிச்சி, ஆசனுார் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும், எள் வண்டிபாளையம், பாதுார் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, கமிட்டிக்கு கொண்டு வரப்பட்டன.அதே போல், மக்காச்சோளம் 100 கிலோ கொள்ளளவு கொண்ட மூட்டைகள் 100 மூட்டைகளும், 80 கிலோ கொள்ளளவு கொண்ட வேர்க்கடலை ஒரு மூட்டையும் விற்பனைக்கு வந்தன.இதில் மக்காச்சோளம் 1,200 ரூபாய் முதல் 1,450 ரூபாய் வரையிலும், வேர்க்கடலை 6,800 ரூபாய் முதல் 7,200 ரூபாய் வரை விலை போனது. மக்காசோளம் எறையூர் பகுதிகளிலும், வேர்க்கடலை செங்குறிச்சி பகுதிகளிலும் சாகுபடி செய்து கொண்டு வரப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X