முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம்

Added : ஜூன் 23, 2020
Share

திட்டக்குடி : திட்டக்குடி தாலுகாவில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அலட்சியத்தோடு வெளியே வருவது அதிகரித்துள்ளது.

திட்டக்குடி தாலுகாவில் கொரோனோ தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.ஊரடங்கு தளர்வு காரணமாக, திட்டக்குடியில் 90 சதவீத கடைகள் திறக்கப்பட்டு, கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் தள்ளுவண்டிகளில் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்கப்படுகிறது.இதை வாங்குவதற்காக கூடும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நிற்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தாலுகா அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் 6 மணிக்கு மேல் பொது இடங்களில் கூட்டமாக நிற்போர் மீதும், முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X