சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு தீவிர பரிசோதனை

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கல்வி மாவட்ட அளவில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சிறப்பு மதிப்பீட்டு மையத்திற்கு வந்த ஆசிரியர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருக்கோவிலுார் கல்வி மாவட்ட அளவில் 10 மற்றும் 11ம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கும் சிறப்பு மதிப்பீட்டு மையம் அரகண்டநல்லுார் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இங்கு, ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு விடைத்தாள் திருத்தும் மையம் மூடப்பட்டது.தொடர்ந்து, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் உடல் நிலை மாற்றம் குறித்து கேட்டறிந்து, கொரோனா அறிகுறி இல்லை என்பதை முழுமையாக உறுதி செய்த பின்னரே மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், டாக்டர் மணிகண்டன் ஆசிரியர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் சங்கரன், மருந்தாளுநர் செந்தில்குமார் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X