சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவியாளருக்கு கொரோனா; அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் துறையில், பெண் உதவியாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியனதையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும், 38 வயது பெண் உதவியாளருக்கு, கொரோனா தொற்று இருப்பது, நேற்று உறுதியானது.இந்த பெண், அவரது அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்வது வழக்கம் என்பதால், அரசு ஊழியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். அங்கு வந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X