தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு

Added : ஜூன் 23, 2020
Share
சின்னசேலம் : சின்னசேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 50 பேருக்கு, சுகாதாரத் துறை சார்பில் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. சின்னசேலம் அடுத்த வாசுதேவனுாரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி, கொரோனா தனிமைப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சின்னசேலம், கச்சிராயபாளையம்,

சின்னசேலம் : சின்னசேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 50 பேருக்கு, சுகாதாரத் துறை சார்பில் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

சின்னசேலம் அடுத்த வாசுதேவனுாரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி, கொரோனா தனிமைப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இவர்களின் பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப வீட்டிற்கு அனுப்படுகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சின்னசேலம் சுகாதார பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார் அறிவுறுத்தலின் படி, மனநல மருத்துவர் பிரவீனா, வட்டார சுகாதார ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் கல்லுாரில் தனிமைப்படுத்தப்பட்ட 50 பேருக்கு மனநலம் மற்றும் யோகா பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர்.டாக்டர் ரோஷிணி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கலைச்செல்வி, மனநல சமூக பணியாளர் விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், தாமோதரன், செவிலியர் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X