குறிஞ்சிப்பாடிக்கு புதிய செயல் அலுவலர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடிக்கு புதிய செயல் அலுவலர்

Added : ஜூன் 23, 2020
Share

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்றார்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு செயல் அதிகாரியாக பதவி வகித்த சுமா, சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகளின் தேர்தல் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கூடுதல் பொறுப்பு அதிகாரியாக குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்தார்.தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பேரூராட்சி நிர்வாகங்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதால், தனியாக செயல் அலுவலரை நியமிக்க பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக ஜெயராமன் நியமிக்கப்பட்டு நேற்று முன் தினம் பொறுப்பேற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X