ஊராட்சி செயலர் மீது பணியாளர்கள் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் மீது பணியாளர்கள் புகார்

Added : ஜூன் 23, 2020
Share
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த பூமாரி ஊராட்சியில் ஊராட்சி செயலரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை கண்டித்து பெண்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். திருக்கோவிலுார் அடுத்த பூமாரி ஊராட்சியில், ஊராட்சி செயலர், நுாறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களிடம் லஞ்சம் கேட்பது. பணித்தள பொறுப்பாளர் வேலையாட்களை தரக்குறைவாக பேசுவது. ஒரு சில

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த பூமாரி ஊராட்சியில் ஊராட்சி செயலரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை கண்டித்து பெண்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த பூமாரி ஊராட்சியில், ஊராட்சி செயலர், நுாறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களிடம் லஞ்சம் கேட்பது. பணித்தள பொறுப்பாளர் வேலையாட்களை தரக்குறைவாக பேசுவது. ஒரு சில குறிப்பிட்ட பிரிவினருக்குச் செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிப்பது உள்ளிட்ட ஒருதலைப்பட்சமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று திருக்கோவிலூர் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., ரேச்சல் கலைச்செல்வியிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட பி.டி.ஓ., நேரில் வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X