பொது செய்தி

தமிழ்நாடு

உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : ஏனாதிமேட்டில் உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி, சப் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

விருத்தாசலம், ஏனாதிமேட்டில் 100 ஏக்கர் பரப்பிலான விளை நிலத்தில், விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு, பூதாமூர் துணைமின் நிலையத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், சில நாட்களாக, இப்பகுதிக்கு சரியான மின்வினியோகம் இல்லாததால், விவசாயிகள் மின் மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் நெல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மின்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த விவசாயிகள் மா.கம்யூ., வட்ட செயலர் அசோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட துணைத் தலைவர் தண்ணிமலை தலைமையில், விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.அதில், குறைந்த மின் அழுத்தமுள்ள டிரான்பார்மர்களால், அடிக்கடி மின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கிறது.உயர் அழுத்த டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.மனுவை பெற்றுக் கொண்ட சப் கலெக்டர் பிரவீன்குமார், நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X