சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டை திறந்து நகை திருட்டு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை திறந்து நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 40; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் மனைவியுடன் வேலைக்குச் சென்றிருந்தார். வீட்டிலிருந்த அவரது மகன் வீட்டைப் பூட்டி சாவியை வீட்டின் வாசல் அருகே மறைத்து வைத்துவிட்டு உடல்நிலை பாதித்திருந்த தனது பாட்டியை அழைத்துக் கொண்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X