பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்றால் பலி 14,000 ஐ கடந்தது

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

புதுடில்லி; நாடு முழுதும், கொரோனா வைரசின் தாக்குதலில், இதுவரை, 14 ஆயிரத்து, 11 பேர் பலியாகி உள்ளனர்; இரண்டு லட்சத்து, 48 ஆயிரத்து, 189 பேர் குணமடைந்துஉள்ளனர்.

கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை:நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில், 14 ஆயிரத்து, 933 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, நான்கு லட்சத்து, 10 ஆயிரத்து, 215 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் மஹாராஷ்டிரா, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 796 பேருடன், முதலிடத்தில் உள்ளது. டில்லி, 62 ஆயிரத்து, 655 பேருடன், இரண்டாம் இடத்திலும், 62 ஆயிரத்து, 87 பேருடன், தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.கடந்த, 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து, 994 பேர் குணமடைந்துள்ளனர். இது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை, இரண்டு லட்சத்து, 48 ஆயிரத்து, 189 ஆக அதிகரித்துள்ளது.குணமடைந்தோர் விகிதம், 56.38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போது, ஒரு லட்சத்து, 78 ஆயிரத்து, 14 பேர் சிகிச்சையில் உள்ளனர்.வைரஸ் தொற்றால், கடந்த 24 மணி நேரத்தில், 312 பேர் இறந்துள்ளனர். இது, பலியானோர் எண்ணிக்கையை, 14 ஆயிரத்து, 11 ஆக உயர்த்தி உள்ளது.இதிலும், 6,283 பேருடன், மஹா., முதலிடத்தில் தொடர்கிறது. டில்லி யில், 2,233 பேர்; குஜராத்தில், 1,684; தமிழகத்தில், 794; மே.,வங்கம் மற்றும் உ.பி.,யில் தலா, 569; ம.பி., யில், 521; ராஜஸ்தானில், 356; தெலுங்கானாவில், 217 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

உலக அளவில், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளை தொடர்ந்து, இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. அத்துடன், வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கையில், எட்டாம் இடத்தில் இருக்கிறது.'ஹஜ்' பயணத்திற்கு அனுமதி இல்லைகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த ஆண்டு, 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்வதற்கு, சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டு அமைச்சர், முகமது சலே பின் தாஹர் பெண்டன், நேற்று முன்தினம், தொலைபேசி வாயிலாக, மத்திய அரசிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த ஆண்டு, நம் நாட்டில் இருந்து, ஹஜ் புனித பயணத்திற்கான அனுமதி வழங்கப்படாது என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X