போலி இ பாஸில் பயணித்த கார் பறிமுதல்: டிரைவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி இ பாஸில் பயணித்த கார் பறிமுதல்: டிரைவர் மீது வழக்கு

Added : ஜூன் 23, 2020
Share

விக்கிரவாண்டி : சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு போலி இ-பாஸில் பயணம் செய்த டிரைவர் மீது வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் சோதனை சாவடியில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மன்னழகன், வி.ஏ.ஓ., ஸ்ரீதர் , சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மாருதி டூர்ஸ் (டி.என்.07-8696 ) காரை நிறுத்தி இ-பாஸ் குறித்து விசாரணை செய்தனர் . இதில் அவர் சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் கார் டிரைவர் முருகன், 32: எனவும் , இவர் நேற்று காலை சென்னையிலிருந்து திண்டுக்கல் செல்ல பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு பயணம் செய்ததும், பயணம் செய்வதற்கான உரிய ஆவணங்கள் போலி எனவும் தெரிய வந்தது.

இதையடுத்து சோதனை சாவடி போலீசார் காரை பறிமுதல் செய்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். விக்கிரவாண்டி போலீஸ் விசாரணையில் அதிக வாடைக்கு ஆசைப்பட்டு காரை எடுத்து வந்தது தெரியவந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X