அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நமக்கு தொற்று பரவாது என்ற குருட்டு நம்பிக்கை வேண்டாம்': உதயகுமார்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; ''நமக்கு தொற்று பரவாது என, யாரும் குருட்டு நம்பிக்கையில் இருக்கக் கூடாது,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் கூறினார்.

கொரோனா தொற்று தடுப்பு தொடர்பாக, சென்னை, திருவொற்றியூரில், அதிகாரிகள், களப்பணியாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், அவர் அளித்த பேட்டி:சென்னையில், 85 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

மொத்தம் உள்ள, 39 ஆயிரம் தெருக்களில், 7,500 தெருக்களில் தான் தொற்று பாதிப்பு உள்ளது. இந்த தெருக்களில் உள்ள, 1.50 லட்சம் வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை, 2.50 லட்சமாக உயர்த்தப்படும். பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளோராக அறியப்பட்ட, எட்டு லட்சம் பேரை கண்காணிக்க, நுண் அளவு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

களப்பணியாளர்கள், வீடுதோறும் கதவுகளை தட்டி, கனிவுடன் பேசி, தடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.நோய் தொற்றுக்கு மருந்து இல்லை; மருந்து கண்டறியும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. நோயை கட்டுப்படுத்த, தனிமனித இடைவெளி, முகக் கவசம், பொது இடங்களில் கவனம், அவசியமின்றி வெளியே செல்லாமல் இருத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.உலக அளவில், அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றிய நாடுகள், தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. நமக்கு தொற்று ஏற்படாது என்ற குருட்டு நம்பிக்கையில், யாரும் இருந்து விடக்கூடாது.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X