அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை குழப்ப வேண்டாம் ஸ்டாலினுக்கு அமைச்சர் கண்டனம்

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 மக்களை குழப்ப வேண்டாம் ஸ்டாலினுக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை; 'அ.தி.மு.க., அரசு தான், கொரோனா நோயை தோற்றுவித்தது போலவும், இவர் தான் கட்டுப்படுத்துவது போலவும், தினமும் அறிக்கை விட்டு, மக்களை குழப்புவதை, ஸ்டாலின் நிறுத்த வேண்டும்' என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தினமும் ஒரு அறிக்கையை, ஆள் வைத்து விடுத்து, தானும் தமிழக அரசியலில் இருக்கிறேன் என்று காட்ட, படாதபாடு படுகிறார். கொரோனா காலத்தில், மலிவான அரசியல் நடத்தி, தன் இருப்பையும், தமிழக மக்கள் மீது, அவருக்கு இருக்கும் வெறுப்பையும் காட்டி வருகிறார்.தமிழக மக்களை காக்கவும், நோயிலிருந்து மீட்கவும், உயிரிழப்பு சதவீதத்தை கட்டுப்படுத்துவதில், இ.பி.எஸ்., அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார அமைப்பு பாராட்டும் வகையில், பணியாற்றி வருகிறது.இதை பாராட்ட உள்ளமில்லாமல், ஸ்டாலின் நடத்துகிற அக்கப்போர்கள், ஒட்டுமொத்த மக்களின் முகச் சுளிப்பிற்கு ஆளாகியிருக்கிறது.

'டெண்டர்' விடுவதற்கு முன்பே, முறைகேடு என, அவதுாறு வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் மூக்கறுபட்ட பின்னும், தி.மு.க., தன் போக்கை திருத்திக் கொள்ளவில்லை.இப்போது, கப்பல் வியாபாரியும், சேது சமுத்திரத்தையே தன் சொந்த வணிகத்திற்கு, சூது சமுத்திரமாக்கிய, டி.ஆர்.பாலுவை வைத்து அறிக்கை விட்டுள்ளார். அரசை குற்றம் சுமத்தி, ஸ்டாலின் விடுகிற அறிக்கைகள் அனைத்துமே, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தான் என்பது தெரிகிறது.

ஸ்டாலின் தன் அறிக்கையில், 'கொரோனா எப்போது முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது, இறைவனுக்கு தான் தெரியும் என, முதல்வர் கூறியுள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார்.இக்கருத்தை, முதல்வர் யதார்த்தமாக கூறியுள்ளார். நோய் தொற்றை ஒழிக்க, மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தான், முதல்வர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதில், என்ன தவறு இருக்கிறது?முதல்வர், தெய்வ பக்தி உள்ளவர். ஸ்டாலினுக்கு கடவுள் பெயரை சொன்னாலே, கோபம் வரும். இதன் வெளிப்பாடு தான் அவரது அறிக்கை.அ.தி.மு.க., அரசு தான் இந்த நோயை தோற்றுவித்தது போலவும், இவர் தான் கட்டுப்படுத்துவது போலவும், தினமும் அறிக்கை விட்டு, மக்களை குழப்புவதை, ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இரவு, பகல் பாராது உழைக்கிற அரசின் மீது, பழிபோடுகிற பாவ காரியத்தை, தி.மு.க., இனியும் தொடர்ந்தால், கொரோனா ஒழிவதற்கு முன்பே, தமிழக அரசியலில் இருந்து அழிந்து போகும்.இவ்வாறு, ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
24-ஜூன்-202020:07:43 IST Report Abuse
K.n. Dhasarathan உங்களுக்கு பேச தடை விதித்து இருந்ததை நீக்கி விட்டார்களா? மறுபடி தடை போடணுமா? நீதிமன்ற உத்தரவை மீறி எட்டு வழி சாலை வேலை நடப்பது, ஜே நினைவு மண்டபம் வேலை நடப்பது இவைகள்தான் மக்களை குழப்புகிறது என்பதாவது தெரியுமா?
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
24-ஜூன்-202016:15:55 IST Report Abuse
Baskar ஸ்டாலின் தனி விமானம் எடுத்து கொண்டு இங்கிலாந்து வந்து சென்றுள்ளார். ஏன் எதற்கு என்ற விபரம் புரியவில்லை. இது உண்மையா என்றும் தெரியவில்லை.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
24-ஜூன்-202013:06:12 IST Report Abuse
G.Kirubakaran திரு.பாலாஜி உங்களை மாதிரி இன்னும் இரண்டு மூன்று தைரியமான அமைச்சர்கள் தேவை . தொடருங்கள் உங்கள் அட்டகாசமான பதில்களை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X