30ல் தொற்று குறையும்! அமைச்சர் நம்பிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

30ல் தொற்று குறையும்! அமைச்சர் நம்பிக்கை

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share

சென்னை; ''சென்னையில், 30ம் தேதிக்குள் தொற்றின் அளவு குறையும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறினார்.

சென்னை, தண்டையார்பேட்டையில், களப்பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின், அவர் அளித்த பேட்டி: தண்டையார்பேட்டையில், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை, 26ல் இருந்து, 120 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு, 66லிருந்து, 54 சதவீதமாக குறைந்துள்ளது. வரும், 30ம் தேதிக்குள், தொற்று பாதிப்பு அளவு கணிசமாக குறையும். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மக்களுக்கு, பீதியை கிளப்பும் வகையில், தி.மு.க., செயல்படுகிறது. சீன விவகாரத்தில், பிரதமருடனான ஆலோசனையில் ஆதரவு; உதயநிதி அறிக்கையில் எதிர்ப்பு என, இரட்டை வேடம் போடுகின்றனர். இது, வேண்டுமென்றே செய்வது போல் உள்ளது.பரிசோதனை முடிவுகள் காலதாமதமாவதை குறைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

களப்பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைகளில், படுக்கை வசதி தேவைக்கு அதிகமாக உள்ளது. படுக்கை வசதி இல்லாததால், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதாக கூறவது தவறான தகவல்.கொரோனா தொற்றால், குடும்ப தலைவர் இறக்கும் பட்சத்தில், அந்த குடும்பத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு, பாண்டியராஜன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X