பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்த இடங்களில் திண்டிவனம் சப் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில் கொரோனா தொற்று பாதித்த இடங்களை சப்கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டிவனம் நகராட்சியில் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட அய்யிலு தெருவில், கடந்த சில நாட்களுக்கு முன், சென்னைக்கு சென்றுவிட்டு திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினரான 14 வயது சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார்.

திண்டிவனம் நகராட்சியில் பகுதியில் கொரோனா தொற்றால் பாதித்த 36 பேரில் , 2 பேர் இறந்தனர். 21 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதித்த அய்யிலு தெரு மற்றும் ஜெயபுரம் 4வது தெருவிலுள்ள டவுன் டி.எஸ்.பி.,அலுவலகம் எதிரிலுள்ள பகுதி ஆகிய இடங்களை, திண்டிவனம் சப்கலெக்டர் அனு, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.தொடர்ந்து அந்தப்பகுதியில் நகராட்சி சார்பில் அந்த பகுதிகளில் சுகாதாரப்பணி மற்றும்நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X