பொது செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகன் இறந்த சம்பவம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் இறந்த சம்பவத்தில், தமிழக அரசு விளக்கம் அளிக்க, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், 58. இவரது மகன், பெனிக்ஸ், 31. இவர்கள், பழைய பஸ் நிலையம் அருகே, மரக்கட்டை வியாபாரம் செய்து வந்தனர்.கடந்த, 19ம் தேதி இரவு கடையில் இருந்த கூட்டத்தை கலைந்து செல்லுமாறும், கடையை மூடும்படியும், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அப்போது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுஉள்ளது.இந்நிலையில், தந்தை, மகன் இருவர் மீதும், கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின், உயிருக்கு போராடிய இருவரும், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரம் தொடர்பாக, உள்துறை செயலர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஆகியோர் விரிவான அறிக்கையை, நான்கு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மனித உரிமைகள் ஆணையத்தின், டி.ஜி.பி., சம்பவம் நடந்த காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.சம்பவம் நடந்த அன்றைய தேதியில், காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, ஆணையத்தில், எட்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார். இதற்கிடையில், 'தந்தை, மகன் இறந்தது குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை குழு அமைக்க வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - Neelgiri,இந்தியா
24-ஜூன்-202005:47:55 IST Report Abuse
Unmai Vilambi சில போலீஸ் மிக அதிகமாக நினைத்து மக்களை அடிக்கிறார்கள். இவர்கள் அடித்தால் ஏன் என்று கேட்க முடியாது. இப்போது அடித்தே (சித்திரவதை செய்து) கொன்று விட்டார்கள். இந்த போலீசை மிக்க சன்மானம் கொடுத்து வாழ்த்த வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கும் தகுந்த சன்மானம் வழங்கவும். அந்த சன்மானத்தைப் பார்த்து வேற போலீஸ்க்கும் ஆர்வம் வர வேண்டும் - தேவை இல்லாமல் அடிக்கக் கூடாதென்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X