சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் சாலையோரம்மருத்துவக்கழிவு கொட்டும் அவலம்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலையோரத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டி எரிக்கும் சம்பவத்தை கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் நகரின் நீர் ஆதாரமாக வி.மருதுார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கே.கே., ரோட்டில் இருந்து சாலாமேடு செல்லும் சாாலையோரத்தில் கடந்த சில மாதங்களாக மருத்துவக்கழிவுகள் கொட்டும் அவல நிலை நீடித்து வருகின்றது. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக்கழிவுகளை இரவோடு, இரவாக கொட்டி எரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சாலையோரத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டும் நபர்கள் மீது கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X