பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிகள் விலை திடீர் உயர்வு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; ஊரடங்கை காரணம் காட்டி, காய்கறிகளின் விலையை, வியாபாரிகள் திடீரென உயர்த்தியுள்ளதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில், தற்காலிக காய்கறி மார்க்கெட், திருமழிசையில் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு, மொத்த விற்பனை மட்டுமே, அனுமதிக்கப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், இங்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். ஊரடங்கால் காய்கறிகள் விற்பனை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மார்க்கெட் வியாபாரிகள், கடை ஊழியர்கள், கூலித் தொழிலாளர்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து உள்ளது. இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்லும் வெளி மார்க்கெட் வியாபாரிகள், போலீஸ் கெடுபிடியை காரணம் காட்டி, காய்கறிகளின் விலையை திடீரென உயர்த்தியுள்ளனர்.கிலோ, 10 முதல், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி மற்றும் வெங்காயம் தற்போது, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உருளை கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பலவகை காய்கறிகளும் கிலோ, 60 ரூபாய்க்கு மேல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

அவைச உணவு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளை மட்டுமே, பொதுமக்கள் நம்பிஉள்ளனர். இந்த நேரத்தில், காய்கறிகளின் விலையை, வியாபாரிகள் உயர்த்தி உள்ளது, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை மற்றும் கூட்டுறவு துறைகள் வாயிலாக, நான்கு மாவட்டங்களில், காய்கறிகள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X