பொது செய்தி

தமிழ்நாடு

அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் செப்டம்பர் வரை இலவசமாக வழங்க முடிவு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சென்னை; ரேஷன் கடைகளில் செப்டம்பர் வரை, அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்குவதற்காக, மத்திய அரசிடம் இருந்து, கூடுதல் அரிசியை பெறுவதற்கான அறிக்கை தயாரிப்பில், உணவுத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ரேஷனில் அனைத்து கார்டுதாரர்களுக்கும், ஏப்ரல் முதல், இம்மாதம் வரை, அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில், இம்மாதம், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பகுதிகளிலும், முழு வீச்சில் தொழில்கள் செயல்படாததால், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது.

எனவே, செப்டம்பர் வரை, ரேஷனில் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.'ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஜூலை முதல் செப்., வரை அரிசி, பருப்பு இலவசமாக வழங்குவது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதத்திற்கு ஒப்புதல் அளியுங்கள்' என, சில தினங்களுக்கு முன், மத்திய உணவு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம், தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை, மத்திய அரசும் ஏற்றதாக தெரிகிறது.இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு, ரேஷனில் வழங்க எவ்வளவு அரிசி தேவைப்படும் உள்ளிட்ட விரிவான விபரங்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கும் பணியில், உணவு துறை தீவிரம் காட்டி வருகிறது. அந்த அறிக்கையை, தமிழக அரசின் வாயிலாக, மத்திய அரசுக்கு அனுப்பி, கூடுதல் தானியங்கள் பெறப்பட்டு, ரேஷனில் வழங்கப்பட உள்ளது.ரேஷனில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, இலவசமாக பொருட்கள் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X