சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த ரவுடிகளுக்கு சிறை

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : ஜாமினில் வெளிவந்து, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த, ரவுடிகள் இருவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோசப் தெருவை சேர்ந்தவர்கள், நேதாஜி, 23; ராஜ்குமார், 28.இருவர் மீதும், பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சோழவரம் காவல் நிலையங்களில், கொலை, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.நேதாஜி மீது, மூன்று கொலை வழக்கு உட்பட ஆறு வழக்குகள்; ராஜ்குமார் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட, 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருவரும், ஜாமினில் வெளிவந்தவர்கள். அதை தொடர்ந்தும், குற்ற வழக்கில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதில், நேதாஜியை, டிச.,2ம் தேதி வரை, 165 நாட்களுக்கும், ராஜ்குமாரை, செப்.,2ம் தேதி வரை, 74 நாட்களுக்கும், சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும், சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X