பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் தான் ரூ.1,000 தர வேண்டும் அலட்சியம் கூடாது என அரசு எச்சரிக்கை

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை; 'ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று தான், 1,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும்; அதை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.புகார்இது குறித்து, கூட்டுறவு நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர், சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்ட இணை பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலை இயக்குனர்களுக்கு

சென்னை; 'ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று தான், 1,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும்; அதை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.

புகார்இது குறித்து, கூட்டுறவு நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர், சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்ட இணை பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:'ரேஷன் கடைகளில், 1,000 ரூபாய் வினியோகம் செய்யக் கூடாது; கார்டுதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வினியோகம் செய்வதுடன், அதை கண்காணிக்கவும் வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், ரேஷன் கடைகளை மூடாமல், கார்டுதாரர்களை வரவழைத்து, 1,000 ரூபாய் வினியோகம் செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒழுங்கு நடவடிக்கைஅரசு அறிவிப்பின்படி, நிவாரண தொகையை, கார்டுதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வினியோகிக்க வேண்டும்.அதை கண்காணிக்க தவறும், சார்நிலை கண்காணிப்பு அலுவலர்கள்; ரேஷன் கடைகளை திறந்து வினியோகிக்கும் ஊழியர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.மேலும், புகார் வரப்பெறின், அவற்றை கண்காணிக்க தவறும் தங்கள் மீதும், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-ஜூன்-202012:36:00 IST Report Abuse
Loganathan Kuttuva வீட்டில் பணம் கொடுக்கும் சமயம் வீட்டில் உள்ள கார் மற்றும் குளிர் சாதன வசதி வீட்டின் அமைப்பை கவனிக்கவும்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
24-ஜூன்-202011:51:58 IST Report Abuse
R. Vidya Sagar இன்னும் கற்காலத்திலேயே இருக்கும் அரசு. வங்கி கணக்கில் நேரடியாக ஏன் போட வில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X