சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட 50 பேர்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த, மாநெல்லுார் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு, இரு தினங்களுக்கு முன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சில தினங்கள் முன்பாக, அவருடைய பிறந்தநாள் விழாவை, மாந்தோப்பு ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார். அதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தொற்று பரவும் வகையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக அவர் மீது ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்தனர். மூன்று கார்கள், ஐந்து பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.விழாவில் பங்கேற்றவர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். முதற்கட்டமாக, 62 பேரின் பெயர் பட்டியலை தயார் செய்தனர். அந்த, 50 பேரை நேற்று, சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X