திருத்தணியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மின் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மின் நிறுத்தம்

Added : ஜூன் 23, 2020
Share
திருத்தணி : திருத்தணி நகராட்சியில், புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.திருத்தணி நகராட்சியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையை தீர்க்க, புதியதாக, 11 கி.வோ., திறன் கொண்ட மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.அந்த வகையில், திருத்தணி - அரக்கோணம் சாலை, பி.எஸ்.ஆர்., திருமண மண்டபம் அருகில், 11

திருத்தணி : திருத்தணி நகராட்சியில், புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருத்தணி நகராட்சியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையை தீர்க்க, புதியதாக, 11 கி.வோ., திறன் கொண்ட மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.அந்த வகையில், திருத்தணி - அரக்கோணம் சாலை, பி.எஸ்.ஆர்., திருமண மண்டபம் அருகில், 11 கி.வோ., கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கும் பணிகள், இன்று முதல், அடுத்த மாதம், 2ம் தேதி வரை நடக்கிறது.இதனால், இன்று காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, சேகர்வர்மா நகர், மாந்தோப்பு பகுதி மற்றும் திருமண மண்டபம் சுற்றியுள்ள பகுதிகளில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.அதே போல், மேற்கண்ட பகுதிகளில் 26, 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில், காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருத்தணி மின் செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X